Saturday, November 5, 2011

மூன்றெழுத்து - 4

மூன்றெழுத்து is an amateur attempt on something like Mastermind with Tamil words.

விதி/வழிமுறைகள் இங்கே.

சென்ற முறை(விடை இப்பதிவின் கீழே), இரண்டே பேர்தான் கண்டுபிடித்தார்கள். " நமக்குத் தெரியாத வார்த்தையாக இருக்கும்" என்ற சந்தேகமே காரணம் என்று நினைக்கிறேன் .
நம்புங்கள்- வார்த்தைகள் யாவும் மிக எளிமையான, அன்றாட உபயோகத்தில் உள்ளவையே. அதனால் முயற்சியை பாதியில் விட வேண்டாம்.

"இது மட்டும் சரியா என்று முதலில் சொல்லுங்கள்" என்ற கேள்வி தாராளமாக வரவேற்கப்படுகிறது. என்னால் இயன்ற வரையில் விரைவாக பதில் கூறுகிறேன்.

அகராதி இங்கே.


1. பகல்
2. ஞாயிறு
3. சேதம்
4. காரம்
5. வாசனை
6. கவணை
7. அழகு
8. கிள்ளை
9. சந்தி


மூன்றெழுத்து - 3

சரியாகக் கணித்த ஹரி பாலகிருஷ்ணன் மற்றும் திருமூர்த்தி அவர்களுக்கு வாழ்த்துகள்.
அனைவருக்கும் நன்றி.

ஒரே வார்த்தை வரும்படியே வடிவமைத்திருக்கிறேன் என்று நம்பிக்கையுடன் நான் சொல்ல- என் பரம எதிரியான யோசிப்பவர் , நுனுகி, நானாகி, நானாகு(என்னங்க வார்த்தை இது- ஏதோ பின்நவீன இலக்கியத்தில இருந்து எடுத்த மாதிரி இருக்கு) என்று மீண்டும் மீண்டும் தாக்கினார்.
முதல் இரண்டுக்கும், எச்சம் அன்றைய syllabus-ல் இல்லையென்று ஜகா வாங்கினாலும், மூன்றாவதில் வீழ்ந்து விட்டேன். அந்த காழ்ப்புணர்ச்சியில்தான் அவர் பெயரை மேலே சேர்க்கவில்லை. :-)

11 comments:

பூங்கோதை said...

வித்யா,

சரியே!

யோசிப்பவர் said...

Archive மெனுவை ஏன் எடுத்து விட்டீர்கள்?

பூங்கோதை said...

Which Archive menu? Top right corner?

பூங்கோதை said...

யோசிப்பவர்,

சரியான விடை. பொற்கிழி தங்கள் முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Surjeet said...

ko lu su??

மனு - தமிழ்ப் புதிர்கள் said...

கோதைஅக்கா, எனக்கு இன்னும் பிடிபடவில்லை. அ,க,ச ஒரு குடும்பமா? அ-ஔ ஒரு குடும்பம், க்-கௌ ரு குடும்பமா.?

நான்கு விடையானால், காரம் , க தவறான இடத்தில் வருவதால் ஒரு பூ என்றல்லவா இருந்திருக்க வேண்டும்.?

குழப்பம் தான் எனக்கு,

பூங்கோதை said...

Surjeet,
1&3 families are right. 2 is incorrect.

Surjeet said...

ku di sai???

பூங்கோதை said...

Surjeet,
Correct!

Surjeet said...

next one???

பூங்கோதை said...

போட்டாச்சு..