சரியாகக் கணித்த யோசிப்பவர், ஹரி , சுர்ஜித், சாந்தி, வித்யா, மனு அவர்களுக்கு நன்றி மற்றும் வாழ்த்துகள்.
பயணக்குறிப்பு : (நன்றி: ஹரி)
எல்லாப் பூவிலும் பொதுவானது 'க' மற்றும் 'வ' குடும்பம்.
'க' பழத்திலும் இருப்பதால் இரண்டாம் எழுத்து 'க' தான் இருக்கவேண்டும்.
முதலோ மூன்றாவதோ 'வ' குடும்பம் இருக்க வேண்டும்.
பழம் வார்த்தையில் உள்ள 'அ', 'ழ' குடும்பம் வர முடியாது.
மீதமுள்ள பூ வார்த்தைகளைப் பார்த்தால், 'க', 'வ' குடும்பம் தவிர மற்ற எந்த குடும்பமும் வர முடியாது.
அப்படியானால் மீதமுள்ள குடும்பங்கள் 'ற', 'ண'. இவை இரண்டும் முதல் வார்த்தையில் வர முடியாது.
சரியாகக் கணித்த யோசிப்பவர், ஹரி பாலகிருஷ்ணன் , இ.கொ அவர்களுக்கு நன்றி மற்றும் வாழ்த்துகள்.
பயணக்குறிப்பு :
முரடு, குணம்,பழம், ஞமலி - தலைக்கு 1 பூ/காய் - மொத்தம் 9 எழுத்துகள்.
எனவே ம"( ம-குடும்பம்) கண்டிப்பாய் உள்ளது. அதுவும் இரண்டாம் எழுத்தாய்.
வேறு எந்த எழுத்தை எடுத்துக் கொண்டாலும், மூன்று எழுத்துக்குள் கணக்கு முடியாது.
அவள் - காய்
நடுவில் ம" என்பதால்,
அ" அல்லது ள" சரியான இடத்தில்.
   ள" என்று எடுத்துக் கொண்டால் -
   துள்ளி - பூ
   காய் அல்லது பழம் வந்திருக்க வேண்டும்.
   எனவே ள" இல்லை. 1 பூ என்பது த".
எனவே அ"ம"த"
அவள் என்பதில், காய் என்பதால், அ அல்லாத அ"
ஞமலி என்பதில், காய் என்பதால், ம அல்லாத ம"
எனவே அமைதி/எமது/உமது எல்லாம் அடிபட சரி சொல்ல சொல்வதுதான் சரியான விடை.
For those who like the game, but are bored with the current format (me for one), there is some good news.
Yosippavar is making an interactive version of this game - and then some - 4 letter and 5 letter variations of the same. All very yummy...I will provide more updates soon.
1.
முரடு
2.
குணம்
3.
மங்கை
4.
அவள்
5.
பழம்
6.
மாயாவி
7.
நகம்
8.
துள்ளி
9.
கனம்
10.
ஞமலி
மூன்றெழுத்து - 4 விடை மற்றும் விளக்கம்
       
சரியாகக் கணித்த வித்யா, யோசிப்பவர், மனு,ஹரி பாலகிருஷ்ணன் ,திருமூர்த்தி, இ.கொ, சுர்ஜீத், திருமூர்த்தி அவர்களுக்கு நன்றி மற்றும் வாழ்த்துகள்.
பயணக்குறிப்பு : (இ.கொ விடையுடன் அனுப்பியது, அம்சமாக இருந்ததால் அப்படியே போடுகிறேன்)
காரம்,கவணை,கிள்ளை
இது மூணுமே காய் என்பதால் குடும்பதில் சரியான எழுத்து தவிர்த்து வேறு எழுத்து சரியான இடத்தில் இருக்கு. இங்க கா,க,கி மூணும் முதல் இடத்தில் இருப்பதால் கீ,கு,கூ,கெ,கே,கை,கொ,கோ (கௌ எல்லாம் வராதுன்னு நம்பிக்கை) - இவற்றில் ஒண்ணுதான் முதல் எழுத்து.
அடுத்ததாக,
பகல், அழகு ரெண்டுமே ஒரே ஒரு பூதான். இந்த குடும்பம் முதலில் வர எழுத்து என்பதால் இந்த ரெண்டு சொற்களும் நமக்குப் புதுசா ஒண்ணும் சொல்லப் போறது இல்லை. ப,ல்,அ,ழ வரிசையில் வேற ஒண்ணும் இல்லை என்பதைத் தவிர.
சேதம், வாசனை,சந்தி - இந்த மூணும் கூட ஒரே ஒரு பூ. அதாவது சரியான குடும்பம் தப்பான இடம். எனவே ச குடும்பம் உண்டு ஆனா அது மூணாவது எழுத்துதான்.
கடைசியா ஞாயிறு - இதுல எதுவும் வராது.
ஆக முதலெழுத்து - கீ,கு,கூ,கெ,கே,கை, கொ,கோ
இரண்டாம் எழுத்து - ப,ல,அ,ழ,ஞ,ய,வ,ண,ர,ம,ள,ன,த,ந,ற குடும்பங்கள் இல்லாம வேற எதுவாயினும் - மீதியிருப்பது- ட,ங,
மூணாவது எழுத்து - ச குடும்பம்
எளிமையான, புழக்கத்தில் இருக்கும் சொல் என்று சொன்னதால் அகராதியைப் புரட்டவில்லை.
--- என்னும் சொல் உடனடியாகத் தோன்றுகிறது.
சென்ற முறை(விடை இப்பதிவின் கீழே), இரண்டே பேர்தான் கண்டுபிடித்தார்கள். " நமக்குத் தெரியாத வார்த்தையாக இருக்கும்" என்ற சந்தேகமே காரணம் என்று நினைக்கிறேன் .
நம்புங்கள்- வார்த்தைகள் யாவும் மிக எளிமையான, அன்றாட உபயோகத்தில் உள்ளவையே. அதனால் முயற்சியை பாதியில் விட வேண்டாம்.
"இது மட்டும் சரியா என்று முதலில் சொல்லுங்கள்" என்ற கேள்வி தாராளமாக வரவேற்கப்படுகிறது. என்னால் இயன்ற வரையில் விரைவாக பதில் கூறுகிறேன்.
சரியாகக் கணித்த ஹரி பாலகிருஷ்ணன் மற்றும் திருமூர்த்தி அவர்களுக்கு வாழ்த்துகள்.
அனைவருக்கும் நன்றி.
ஒரே வார்த்தை வரும்படியே வடிவமைத்திருக்கிறேன் என்று நம்பிக்கையுடன் நான் சொல்ல-
என் பரம எதிரியான யோசிப்பவர் , நுனுகி, நானாகி, நானாகு(என்னங்க வார்த்தை இது- ஏதோ பின்நவீன இலக்கியத்தில இருந்து எடுத்த மாதிரி இருக்கு) என்று மீண்டும் மீண்டும் தாக்கினார்.
முதல் இரண்டுக்கும், எச்சம் அன்றைய syllabus-ல் இல்லையென்று ஜகா வாங்கினாலும், மூன்றாவதில் வீழ்ந்து விட்டேன். அந்த காழ்ப்புணர்ச்சியில்தான் அவர் பெயரை மேலே சேர்க்கவில்லை. :-)
பின்வரும் 2 விதிமுறைகள் நீக்க/மாற்றப் படுகின்றன்.
8. இப்போதைக்கு, கேள்வி வார்த்தையில் பெயரெச்சம்/வினையெச்சம் கிடையாது.
9. இப்போதைக்கு, கேள்வி வார்த்தையில் வடமொழி எழுத்து கிடையாது. கேள்வி வார்த்தையில், "ஜ" தவிர்த்த மற்றபிற வடமொழி எழுத்துகள் இடம்பெறாது.
இது தவிர , ஒரு சிறு விளக்கம்.
10. கேள்வி வார்த்தையிலோ பதில் வார்த்தையிலோ, எழுத்தோ/குடும்ப எழுத்தோ , மீண்டும் வரலாம். உதாரணம்:- தத்தை, கொக்கு, மமதை.
மேல் சொன்ன மூன்று விதிகளும், இன்றைய வார்த்தையில் இல்லை. ஆனால் இனிவரும் வார்த்தைகளில் எப்போது வேண்டுமானாலும் வரலாம்.
1.
அங்கே
2.
பலன்
3.
எங்கோ
4.
மந்தி
5.
இறகா
6.
நம்பு
7.
அதனை
8.
துகள்
9.
வேங்கை
விடை
மூன்றெழுத்து - 2 :: முறிவு
சரியாகக் கணித்த அனைவருக்கும் நன்றி மற்றும் வாழ்த்துகள்.