Sunday, November 27, 2011

குறள் வளை - 4

கீழே திருக்குறள் ஒன்று கலைந்து இருக்கிறது. எந்தக் குறள் என்று கண்டுபிடியுங்கள்.
பின்னூட்டமாகவோ தனிமடலிலோ (poongs<dot>seenu<at>gmail<dot>com) தெரிவிக்கவும்.





        இரைந்து உண்டனங் கறிஎன திருடன்
        காலை கணிப்பா லறிந்தது.



திருக்குறள் reference இங்கே.


குறள் வளை -2 விடை

சரியான விடை எழுதிய ஹரிஹரன்,முத்து, சுர்ஜித், சாந்தி, மனு அவர்களுக்கு நன்றி!


        பலசாலி குடுமிச் சாய்த்துப் பெறும்பீடம்
        அஞ்சி அப்பெண் காயின் .


        பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
        சால மிகுத்துப் பெயின்.




நாமக்கல் கவிஞர் திரு. இராமலிங்கம் பிள்ளை அவர்களின் உரை:

வலியறிதல்: 475. மிகவும் இலேசான மயில் தோகையைப் பாரம் ஏற்றிய வண்டியானாலும் அந்த மயில் தோகையையும் அளவுக்கு மீறி அந்த வண்டியில் ஏற்றினால் அதன் அச்சு முறிந்துவிடும்.




No comments: