கீழே திருக்குறள் ஒன்று கலைந்து இருக்கிறது. எந்தக் குறள் என்று கண்டுபிடியுங்கள்.
பின்னூட்டமாகவோ தனிமடலிலோ (poongs<dot>seenu<at>gmail<dot>com) தெரிவிக்கவும்.
(சொற் குற்றம்,பொருட் குற்றம் பார்க்க வேண்டாம் - it is just a jumble).
        பலசாலி குடுமிச் சாய்த்துப் பெறும்பீடம்
        அஞ்சி அப்பெண் காயின் .
குறள் வளை -2 விடை
        நீள்துறவும் பெண்பெருமைப் பேசிச்சென்ற காதை
        அங்கனும் பின்னும் பொறிப்ப.
        பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
        செம்பொருள் காண்பது அறிவு.
யாருமே சொல்லவில்லை என்றால் ஏதேனும் குறிப்புக் கொடுக்கலாம் என்று இருந்தேன், ஆனால் திரு.முத்து அவர்கள் சரியாக சொன்னதால் ஒன்றும் கொடுக்காமல் விட்டு விட்டேன்.
இந்தக் குறளை எடுத்தால் கலைப்பது கடினம், அந்தக் குறளை எடுத்தால் கண்டுபிடிப்பது சுலபம் என்று எதையும் ஒத்திப்போடும் வல்லமை உள்ள என் மனது நொண்டிச்சாக்குத் தேடியதால், கண்ணை மூடி இதை எடுத்தேன்.
நாமக்கல் கவிஞர் திரு. இராமலிங்கம் பிள்ளை அவர்களின் உரை:
358. பிறப்பு என்னும் அறியாமை நீங்கவேண்டுமென்ற நோக்கத்தோடு, நாம் அறிந்த பொருள்கள் எல்லாவற்றிலும் சிறந்ததும் குற்றமற்றுச் செம்மையானதுமான பொருள் எது என்று கண்டறியும் அறிவுதான் மெய்யுணரும் அறிவு.
10 comments:
Peel pei chaakaadum achirum appandam
chaala miguthu peyin???
நாமக்கல் கவிஞர் திரு. இராமலிங்கம் பிள்ளை அவர்களின் உரை:
358. பிறப்பு என்னும் அறிஅமை நீங்கவேண்டுமென்ற் நோக்கத்தோடு, நாம் அறிந்த பொருள்கள் எல்லாவற்றிலும் சிறந்ததும் குற்றமற்றுச் செம்மையானதுமான பொருள் எது என்று கண்டறியும் அறிவுதான் மெய்யுணரும் அறிவு.
நன்றி, திரு.முத்து.
மேலே சேர்த்து விட்டேன்.
Surjeet,
Right!
பூங்கோதை.
தெரியாத குறள் என்று புரிந்து கொண்டேன். அதனால் சுவாரசியம் அதிகமானது. நினைவிலிருந்து சொல்லாமல் அதைஒட்டுவேலை மூலமே கண்டுபிடிக்க முயல்வதுதான் நல்ல சவால். கடைசியில் முடியவில்லை. குறள் வளையைத் தொடர்ந்து நெரியுங்கள். "ஏமாப்பு" இந்த மாதிரில் இல்லாமல் ஓரளவு பரிச்சயமான சொற்களைக் கொண்ட, ஆனால் அதிகம் பிரபலம் ஆகாத குறள்களைக் கொண்டு இப்புதிரமைத்தால் நன்றாக இருக்கும். ஆனாலும் சில குறள் மன்னர்கள் இருக்கிறார்கள். எல்லாவற்றையும் படித்து வைத்திருப்பார்கள்.
விடை இடும்போது கேள்வியை இணைத்துவிட்டால் ஒரே இடத்தில் பார்த்து ரசிக்கலாம்.
வணக்கம் வாஞ்சிநாதன்,
கேள்வியையும் இணைத்து விட்டேன்.
நன்றி.
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.
thirukkural475
சாந்தி,
சரியே!
பீலிபெய் சாகாடும் தானே
யின், அப் பெண் காட்டிக்கொடுத்துவிட்டது. அதெப்படி இப்படி கலைக்கிறீர்கள், அருமை.
மனு,
நன்றி, சரியே..
Post a Comment