Monday, October 3, 2011

குறுக்கெழுத்துப்புதிர் - 3

Send your answers to poongs<dot>seenu<at>gmail<dot>com

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir.mayam@gmail.com.

Thanks to Mr.Hari Balakrishnan for this wonderful tool!


****Click for Scorecard****

குறுக்காக:
1.பொறுப்பு இருந்தும் இரண்டாம் பரிசு வாங்கி கஷ்டப்படு. (4)
5.கந்தர் பார்த்துப்பாருன்ற தைரியத்திலதான் கவுண்டர் பம்பரம் விட்டாரு. (7)
7.மாட்டிக்கொண்ட சிலந்தி தலை மட்டும் இயக்கி அதை இழந்து அலைந்தது. (4)
8.உள்ளே வெளியே வலித்தாங்காம கலங்கி வலியைக் குறை. (5)
9.முதலில் வியாசர் துறவியின் முதல் புத்திரன் புத்தி கெட, மூன்றாவதாய் எமன் வந்தான். (4)
11.வாயைத் திறந்தாலே பொண்டாட்டி அத்தாட்சி கேட்கிறாள்.(4)
12.கோடியில் ஒரு சதவீதம் இருந்தாலும், குணம் நடுவில் சேர்ந்தால்தான் அழகு.(5)
14.ஆணையோ முதலில் மோகம் வந்த பின் பாதி சபலம் சேர்ந்து குழப்பும்.(4)
16.கறைபடாதவதானா வயசுப்பொண்ணுன்ணு ஊர் கேக்கும்.(7)
18.முயல் துணையில்லாத பயத்தில் பதில் தெரியாமல் குழம்பியது(4)

நெடுக்காக:
1.பட்டினி பாதி பசி பாதி இருந்தால், அப்படியே முழுங்கு. (3)
2.முதலில்தான் வில்லன், அப்புறமாய் நேர் எதிர். தடங்கலே வராம பார்த்துப்பான். (5)
3. பாதி தங்கம் தரும் அதற்கு ஏற்ப பொருள். (2)
4.இரண்டு கஜம் நீளம் நடுவில் சேர்த்து தாம்பை போடு, ஏழில் ஒன்று(3,3)
6.படிக்காம முன்னேற வழி இல்லாமல் கலங்கும் வாத்தியார் வாரிசா? (3)
8.தேன் குடித்ததும், தும்மல் பாதியில் நின்றது. (2)
9.நாண் தடை (6)
10.ஆண்டுதோறும் சுற்றினால், இல்லையென்று சொல்லாது. (2)
11.ஆரியச்சபை தனில் காணாமல் போன பை ஒரு அதிசய பொருள். (5)
13.மாமா ரொம்ப மோசம், வாரத்தில ஒரு நாள் மத்தியிலேயே குடிக்க ஆரம்பிப்பாரு. (3)
15.கடவுளே பெண்ணாக வந்தாலும் அது ஒரு பிசாசுதான். (3)
17.ஐஸ்வர்யா ரோபோவில் முன்பின் தெரியாதவர். (2)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ

1 comment:

Padma said...

Kothai, good one..as always u surprise me..oru pakkam hindi/english um veluthu vangara...other hand tamil layum kalakara..