Word Puzzles in Tamil
...
Monday, April 8, 2013
குறுக்கெழுத்துப்புதிர் - 4
This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir.mayam@gmail.com.
குறுக்காக:
7.இரு தழும்பு (2)
8.விழுப்புரம் சுற்றி கண்ணப்பன் மனதாரச் சென்று வேண்டியது (6)
9.முதலில் மோகம் முன் கிடந்து வருத்துமோ? (5)
10.இரண்டாம் பொருத்தம்? (3)
11.புழுப்பூச்சி? (7)
12.துறவறம் தொடங்கும் முன் அற்புதம் நடக்காது (3)
15.ஏறத்தாழ உதவும்? (2,4)
16.ஒன்றை முடித்ததும் வருவது - வாழ்விலும் குறுக்கெழுத்திலும் (4,4)
17.முதலில், சப்பாத்தி மேல் வைத்த ஆசை சாப்பாட்டுக்குக் கண்டிப்பாத் தேவை (4)
18.முன்னேற்பாடு . இல்லை, இல்லை- மனதில் ஒரு நெஞ்சார்ந்த பிரயத்தனம் (5)
19.காய் நறுக்கு (4)
20.வெண்புறா (5,3)
22.அங்கே அதிசயமாய்ப் பூத்துக் காய்த்தது (6)
24.அழுக்கு தாங்கமுடியாத கருவண்ணம் (3)
25.ஐந்து முகம் கொண்டது பிடி? தெளிவு படுத்து (7)
27.தம்பி சின்னதிலயிருந்தே இப்படித்தான், ஒட்டிக்கிட்டே இருக்கும் (3).
30.பரம்பரை சனம் உள்ளே நடுவில் வந்தால்? (5)
31.வரலாறு தொடங்காத முன் தோன்றிய முதல் தலைவன் உருவாக்கியது வறுமை (6)
32.காயம் பொய் இல்லை (2)
நெடுக்காக:
1.தமிழின் சிறப்புத் தெரியாமல் கழண்டு, தலைதப்பிக் கொண்டது என்று உளறியதைப் பார்த்ததுண்டு (6)
2.இந்தப் பிறவியின் பிழை (3)
3.தூண் மறைவில் கூட்டம், மத்தியில் கொட்டும் முரசு (6)
4.தஞ்சம் கொடுக்கும் தைரியம் (4)
5.இச் (8)
6.முட்டி இடும்முன் வாய்திறந்து ஒத்துக்கொள்(3)
7.குரு எதற்கு, கலங்கரைவிளக்கம் எதற்கு? (6)
13.உதாரணமாய், காரிக்கும் பாரிக்கும் உள்ள ஒற்றுமை (4,3)
14.ரொம்ப ரொம்ப ரொம்ப (2,2,3)
16.அங்கதன், அம்மா இல்லாததால், அரைத்த மைதாவை கலந்து செய்தவை (5)
18.ஆசைப்பதத்தாலே தடுமாறி குரங்கு அகப்பட்டது எதனாலே?(8)
21.பெத்தவன் கட்டியவள் பெத்தவள் இல்லை (6)
22.கசக்கல் பொருட்டு தந்த அதில், அழுக்கு அழுந்தி போய்ச் சேர்ந்தது (6).
23.பட்டுத் தலம் (6)
26.கூவிளம் புளிமா கொண்டு வரும் சொல் (4)
28.ஆசை காட்டும் கயிறு (3)
29.நீராவித்தைலம் உண்டாக்கும் கலை (3)
| |
உயிர் | a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ| |
மெய் | k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்| |
உயிர்மெய் (மாதிரி) | ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்| |
ஆய்தம் | H : ஃ |
Sunday, November 27, 2011
மூன்றெழுத்து - 7
அகராதி இங்கே.
1. | தவணை | ||||
2. | புதன் | ||||
3. | ஆமோதி | ||||
4. | சூடம் | ||||
5. | ஞாயிறு | ||||
6. | ஏந்து | ||||
7. | குழல் | ||||
8. | சுருள் | ||||
9. | முரண் |
மூன்றெழுத்து - 5 விடை மற்றும் விளக்கம்
       
சரியாகக் கணித்த யோசிப்பவர், ஹரி , சுர்ஜித், சாந்தி, வித்யா, மனு அவர்களுக்கு நன்றி மற்றும் வாழ்த்துகள்.
பயணக்குறிப்பு : (நன்றி: ஹரி)
எல்லாப் பூவிலும் பொதுவானது 'க' மற்றும் 'வ' குடும்பம்.
'க' பழத்திலும் இருப்பதால் இரண்டாம் எழுத்து 'க' தான் இருக்கவேண்டும்.
முதலோ மூன்றாவதோ 'வ' குடும்பம் இருக்க வேண்டும்.
பழம் வார்த்தையில் உள்ள 'அ', 'ழ' குடும்பம் வர முடியாது.
மீதமுள்ள பூ வார்த்தைகளைப் பார்த்தால், 'க', 'வ' குடும்பம் தவிர மற்ற எந்த குடும்பமும் வர முடியாது.
அப்படியானால் மீதமுள்ள குடும்பங்கள் 'ற', 'ண'. இவை இரண்டும் முதல் வார்த்தையில் வர முடியாது.
வ"கற" அல்லது வ"கண" => வைகறை .
(வ" => வ குடும்பம்)
குறள் வளை - 4
கீழே திருக்குறள் ஒன்று கலைந்து இருக்கிறது. எந்தக் குறள் என்று கண்டுபிடியுங்கள்.
பின்னூட்டமாகவோ தனிமடலிலோ (poongs<dot>seenu<at>gmail<dot>com) தெரிவிக்கவும்.
        இரைந்து உண்டனங் கறிஎன திருடன்
        காலை கணிப்பா லறிந்தது.
குறள் வளை -2 விடை
சரியான விடை எழுதிய ஹரிஹரன்,முத்து, சுர்ஜித், சாந்தி, மனு அவர்களுக்கு நன்றி!
        பலசாலி குடுமிச் சாய்த்துப் பெறும்பீடம்
        அஞ்சி அப்பெண் காயின் .
        பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
        சால மிகுத்துப் பெயின்.
நாமக்கல் கவிஞர் திரு. இராமலிங்கம் பிள்ளை அவர்களின் உரை:
வலியறிதல்:
475. மிகவும் இலேசான மயில் தோகையைப் பாரம் ஏற்றிய வண்டியானாலும் அந்த மயில் தோகையையும் அளவுக்கு மீறி அந்த வண்டியில் ஏற்றினால் அதன் அச்சு முறிந்துவிடும்.
Friday, November 18, 2011
மூன்றெழுத்து - 6
மூன்றெழுத்து is an amateur attempt on something like Mastermind with Tamil words.
1. | அகழி | ||||
2. | சுவர் | ||||
3. | பங்கு | ||||
4. | பாவனை | ||||
5. | கடல் | ||||
6. | நாவல் | ||||
7. | கயமை | ||||
8. | தவளை |
மூன்றெழுத்து - 5 விடை மற்றும் விளக்கம்
       
சரியாகக் கணித்த யோசிப்பவர், ஹரி பாலகிருஷ்ணன் , இ.கொ அவர்களுக்கு நன்றி மற்றும் வாழ்த்துகள்.
பயணக்குறிப்பு :
முரடு, குணம்,பழம், ஞமலி - தலைக்கு 1 பூ/காய் - மொத்தம் 9 எழுத்துகள்.
எனவே ம"( ம-குடும்பம்) கண்டிப்பாய் உள்ளது. அதுவும் இரண்டாம் எழுத்தாய்.
வேறு எந்த எழுத்தை எடுத்துக் கொண்டாலும், மூன்று எழுத்துக்குள் கணக்கு முடியாது.
அவள் - காய்
நடுவில் ம" என்பதால்,
அ" அல்லது ள" சரியான இடத்தில்.
   ள" என்று எடுத்துக் கொண்டால் -
   துள்ளி - பூ
   காய் அல்லது பழம் வந்திருக்க வேண்டும்.
   எனவே ள" இல்லை. 1 பூ என்பது த".
எனவே அ"ம"த"
அவள் என்பதில், காய் என்பதால், அ அல்லாத அ"
ஞமலி என்பதில், காய் என்பதால், ம அல்லாத ம"
எனவே அமைதி/எமது/உமது எல்லாம் அடிபட சரி சொல்ல சொல்வதுதான் சரியான விடை.
குறள் வளை -3
கீழே திருக்குறள் ஒன்று கலைந்து இருக்கிறது. எந்தக் குறள் என்று கண்டுபிடியுங்கள்.
பின்னூட்டமாகவோ தனிமடலிலோ (poongs<dot>seenu<at>gmail<dot>com) தெரிவிக்கவும்.
(சொற் குற்றம்,பொருட் குற்றம் பார்க்க வேண்டாம் - it is just a jumble).
        பலசாலி குடுமிச் சாய்த்துப் பெறும்பீடம்
        அஞ்சி அப்பெண் காயின் .
குறள் வளை -2 விடை
        நீள்துறவும் பெண்பெருமைப் பேசிச்சென்ற காதை
        அங்கனும் பின்னும் பொறிப்ப.
        பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
        செம்பொருள் காண்பது அறிவு.
யாருமே சொல்லவில்லை என்றால் ஏதேனும் குறிப்புக் கொடுக்கலாம் என்று இருந்தேன், ஆனால் திரு.முத்து அவர்கள் சரியாக சொன்னதால் ஒன்றும் கொடுக்காமல் விட்டு விட்டேன்.
இந்தக் குறளை எடுத்தால் கலைப்பது கடினம், அந்தக் குறளை எடுத்தால் கண்டுபிடிப்பது சுலபம் என்று எதையும் ஒத்திப்போடும் வல்லமை உள்ள என் மனது நொண்டிச்சாக்குத் தேடியதால், கண்ணை மூடி இதை எடுத்தேன்.
நாமக்கல் கவிஞர் திரு. இராமலிங்கம் பிள்ளை அவர்களின் உரை:
358. பிறப்பு என்னும் அறியாமை நீங்கவேண்டுமென்ற நோக்கத்தோடு, நாம் அறிந்த பொருள்கள் எல்லாவற்றிலும் சிறந்ததும் குற்றமற்றுச் செம்மையானதுமான பொருள் எது என்று கண்டறியும் அறிவுதான் மெய்யுணரும் அறிவு.
Saturday, November 12, 2011
குறள் வளை -2
கீழே திருக்குறள் ஒன்று கலைந்து இருக்கிறது. எந்தக் குறள் என்று கண்டுபிடியுங்கள்.
பின்னூட்டமாகவோ தனிமடலிலோ (poongs<dot>seenu<at>gmail<dot>com) தெரிவிக்கவும்.
(சொற் குற்றம்,பொருட் குற்றம் பார்க்க வேண்டாம் - it is just a jumble).
        நீள்துறவும் பெண்பெருமைப் பேசிச்சென்ற காதை
        அங்கனும் பின்னும் பொறிப்ப.
குறள் வளை -1 விடை
         வானிகர் கூந்தல் இருக்காத வனின்இளக
         உற்றப் பயனாய் இறுக.
        இனிய உளவாக இன்னாத கூறல்
        கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.
நூறாவது குறள், விளக்கம் தேவையில்லாத குறள், எனக்கு மிகவும் பிடித்த/தேவையான குறள்.