This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.
|
குறுக்காக: 3.முக்கால் கிழிந்த துணி கொண்டு சுற்றி சுத்தம் செய்தபின்தான் வாசம் (5).
6.மாமியார் வீட்டில் செல்லமா நடுவில் இருந்தால் மதிப்பு குறைவுதான் (4).
7.மரியாதையாய் சிந்தனை செய்(4).
8.அதிர்ஷ்டமுள்ள மரக்கா, சொச்சம் உள்ளே எப்படியோ சேரும்(6).
13.வலையுலகம் பிரவேசித்து கணவனைத் துறந்தேன்? (6).
14.மரம் ஒன்று தூறல் துவங்கவில்லை என்றாலும் காற்று தரும்.(4).
15.தவமிருந்து கேட்டது புல்லும் புதரும் தான்.(4).
16.முன் முயற்சி - பின் விளைவு?(5)
நெடுக்காக: 1.வாயைத் திறக்க கஷ்டம்னா, சாமியார் வீட்டுக்கா போகனும்? (5)
2.இன்று தொடங்கும் காலம் வசந்தம், ஆனால் ஈர்ப்பு இல்லாமல் சும்மா இருக்கிறது.(5)
4.இந்த வீட்டுக்கு சுனாமி பாதிப்பு அதிகம் இருக்கும்.(4)
5.வீட்டில் இரு, உள்ளே நடுவில் பயம் வந்தால் தடுமாறு.(4)
9.கருகிப் போகும் ஒரு நவரத்தினம்?(3)
10.சோனியா நாட்டை சுற்றிலும் முட்டைக் கரு , தவளை இதயம் கலந்து சாப்பிடுவதுதான் காலை உணவா? (3,2)
11.மாம்பழம் வைத்தியருக்கு அம்மா கடைசியா கிடைத்தது ஒரு சொந்தம்.(5)
12.தீபம் ஏற்றும் இடத்தில், மெல்லிய தீ மெதுவாய் தணிந்தது.(4)
13.தவில் தொடங்காமல் பல குழப்பம் சேர பாடல் ஆரம்பம்.(4)
| ||||||
உயிர் | a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ| |
மெய் | k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்| |
உயிர்மெய் (மாதிரி) | ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்| |
ஆய்தம் | H : ஃ |
6 comments:
பூங்கோதை
http://groups.google.com/group/kurukkumnedukkum
இந்தக் குழுமத்தில் நீங்கள் சேர்ந்திருக்கிறீர்களா எனத் தெரியாது. சேரவில்லை என்றால் சேரலாம்.
இந்தப் புதிரின் சுட்டியை நான் அங்கு கொடுத்துவிட்டேன்.
புதிரினைப் போட முயல்கிறேன்.
குறுக்கு
16) எதிர்வினை
நெடுக்கு
12) வர்த்தி
13)பல்லவி
இதெல்லாம் முதலில் சரியா என்று சொல்லுங்கள். பல்லவி மட்டும் கண்டிப்பாக சரி என்று தோன்றுகிறது!!
பூங்கோதை உங்கள் புதிர்க் குறிப்புகள் பல முழு வாக்கியங்களாக அமைந்து தோற்றுவிக்கும் அப்பாவித்தனம் மிகவும் வசீகரமானது.
நகைச்சுவையும் அப்பாவித்தனத்துள் ஒளிந்துள்ள மெல்லிய விஷமமும் ரசித்தேன்.
(சாமியார், மாமியார் இதைத்தான் சொல்கிறேன்)
உங்களுடைய புதிரில் நான் கண்ட மற்றொரு சிறப்பான அம்சம், அதன் தோழமை. சிலர் முதல் சந்திப்பிலேயே நீண்ட நாட்கள் பரிச்சயமானது போல் பேசிப் பழகி நம் மனதில் இடம்பிடித்துவிடுவார்கள். நீங்கள் எழுதும் குறிப்பிலும் வார்த்தைகளுடன் உங்களுக்குள்ள உரிமையான நட்பு வெளிப்படுகிறது.
"தென்றல்" பத்திரிகையில் வெளிவரும் புதிர்களைவிட சுவாரசியமாக இருக்கின்றன உங்களுடையவை. விரைவில் தென்றலை மிஞ்சிச் சிறப்படைந்து புதிர் ஆர்வலர்களின் மனதில் இடம் பெற்றுவிடுவீர்கள்.
---வாஞ்சிநாதன்
ஒன்னு ரெண்டு பேர் திட்டுனா வாங்கிக்கலாம், குழுமத்துக்கு அனுப்பி நிறைய பேருக்கிட்ட வாங்கனுமான்னு யோசிச்சுட்டு இருக்கும் போதே, அங்கு link அளித்ததுடன்(ஒன்னு ரெண்டு பேரே அது மூலமாதான் வந்தாங்க), முழுவதுமாய் முதலில் முடித்த கொத்தனாருக்கு மிக்க நன்றி.
hi poongodhai
liked ur latest post, unai kaanavillaiye...aanaa postaiye kaanavillaiye yen? ;)
but tat song at the end was too good :)
முன்ன பின்ன தெரியாதவங்களை விமர்சிச்சு பதிவு போட்டது கொஞ்சம் சங்கடமா இருந்துச்சு, அதுனால எடுத்திட்டேன்.
வந்ததுக்கும் படிச்சதுக்கும், சொன்னதுக்கும், ரொம்ப நன்றிங்க!
Post a Comment